தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி - 4

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category நேர்காணல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHardbound
Pages 544
Weight500 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன் கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது. எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.

"20ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்."
அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப, ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட் டுள்ளார்கள்.அறிஞர் அண்ணா , மடல் இலக்கியத்தை "தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்."

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

நேர்காணல்கள் :

பூம்புகார் பதிப்பகம் :