தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ்

ஆசிரியர்: முனைவர் சு.சேகர்

Category கட்டுரைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 168
ISBN978-93-82810-78-0
Weight250 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661916-இல் பாரதி தமிழுக்கு முதன்முதலாகச் செய்துவைத்த ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ கவிதைகளை, இன்றைக்குப் பலரும் ஆர்வத்தோடு எழுதி வருகின்றனர். தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம்போல் பரவலாகக் கொண்டு சென்றதில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் மு.முருகேஷ். ஹைக்கூ கவிதை நூல்கள் தமிழில் வரத் தொடங்கிய காலந்தொட்டு, அவர் எழுதியதோடு நில்லாமல், பலரையும் ஹைக்கூ எழுதிட ஊக்கப்படுத்தியவர். தமிழகமெங்கும் இளைய கவிஞர்களுக்கு மேடையமைத்துத் தந்து, ஹைக்கூ திருவிழாக்களை நடத்தியுள்ளார்.
தமிழில் ஹைக்கூ அறிமுகமாகி ஒரு நூற்றாண்டினைத் தொட்டிருக்கும் நிலையில், கவிஞர் மு.முருகேஷ் ஹைக்கூ தொடர்பாக சிற்றிதழ்களில் எழுதிய சிறப்புக் கட்டுரைகள், ஹைக்கூ நூல்களுக்கு அவரெழுதிய முன்னுரைகள், நூல் அறிமுகங்கள், ஹைக்கூ தொடர்பான அவரது நேர்காணல்கள் என அனைத்தையும் தொகுக்கும் பணியை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய முனைந்தேன். 'தமிழில் வானம்பாடிகளுக்குப் பிறகு ஒரு கவிதை இயக்கம்போல் ஹைக்கூ கவிஞர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்' என்று கவிக்கோ அப்துல்ரகுமான் சொன்ன வரிகள் எவ்வளவு சத்தியமானவை என்பதைக் கண்டுகொண்டேன்.இந்நூல் கவிஞர் மு.முருகேஷின் ஹைக்கூ குறித்த தொடர் செயல்பாடுகளை எழுத்தின் வழி நிறுவுவதோடு, ஹைக்கூ படைத்திட ஆர்வம் கொள்ளும் இளைய கவிஞர்களுக்கும் நிச்சயம் தூண்டுதலைத் தரும். மேலும், இன்றைக்கு தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பையும் பலரும் அறிந்திட செய்யும் எனும் நம்பிக்கையோடு இந்நூலைத் தொகுத்ததில் பெருமிதம் கொள்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

அகநி வெளியீடு :