தமிழ் வளர்த்த சான்றோர்கள்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
FormatPaperback
Pages 144
ISBN978-93-80217-75-8
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தொடங்கி வீரமாமுனிவர் வரை 22 தமிழறிஞர்களைப் பற்றிய வரலாறுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை என்பார்கள். தமிழுக்குத் தொண்டு செய்து தமது வாழ்வைத் தமிழுக்காகத் தியாகம் செய்தவர்கள், தமிழ் மக்களால் மறக்கப்பட்டவர்கள், வெளிச்சத்துக்கு வரவேண்டியவர்கள் ஒதுக்கப்பட்டுக் கிடந்த நிலையை மாற்றி அவர்களைத் தமிழன்னையின் தவப்புதல்வர்கள் ஆக்கிக் காட்டும் வகையில் இப் பெருமக்களின் வரலாறுகள் அமைந்துள்ளன.
தலபுராணங்கள் பல எழுதி கம்பனைப் போல பல்லாயிரக் கணக்கான பாடல்களை எழுதியவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பின்ளை அவர்கள். ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து அச்சு வாகனமேற்றி அணிவகுக்க வைத்தவர். டாக்டர் உ.வே.சா. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் மூலம் தமிழ்வளர பாடுபட்டவர் வீரமாமுனிவர். இப்படிப் பல்வேறு தமிழறிஞர்களின் சிறப்புகளைத் தேடித்தேடி அரிதின் முயன்று தமிழ் வளர்த்த சான்றோர்கள் என்னும் இந்நூலைத் தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர் பட்டத்தி பனை மந்தன். பல்துறை நூல்களையும் சிறந்த வண்ணம் ஆக்கித் தரும் பட்டத்தி மைந்தன் இந்நூலையும் ஆக்கித் தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :