தமிழ் வரலாறு
ஆசிரியர்:
ஞா.தேவநேயப் பாவாணர்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1126-6921-2589-9185
{1126-6921-2589-9185 [{புத்தகம்பற்றி காட்சியும் கருத்துமாகிய ஒவ்வொரு பொருட்கும் வரலாறி ருப்பினும், ஒரு நாடு, அதன் மக்கள், அவர்கள் மொழி, அவர்கள் நாகரிகம் ஆகிய சிலவற்றின் வரலாறே சிறப்பாக வரலாறெனப்படும். ஒரு நாட்டு வரலாறு அந் நாட்டின் பழங்குடி மக்களையும் வந்தேறிகளையும் (Immigrants) பிரித்துக் காட்டுவதால், ஒரு வீட்டுக்காரனுக்கு அவ் வீட்டு ஆவணம் ஏமக்காப்பாவது போல், ஒரு நாட்டுப் பழங்குடி மக்கட்கும் அந் நாட்டு வரலாறு சில வுரிமை வகையில் ஏமக்காப்பாம். இனி, வரலாறன்றி ஒரு மொழியின் உண்மையான இயல்பை அறிவதும் அரிதாம். } {பதிப்புரை தமிழ் மண்ணில் 79 ஆண்டுகாலம் வாழ்ந்து, 50 ஆண்டுகாலம் தமிழ்மொழி ஆய்வு செய்த ஆறிஞர்; தனித் தமிழ் ஊற்று; செந்தமிழ் ஞாயிறு; இலக்கணச் செம்மல்; வாராது வந்த மாமணி; தமிழ், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் ஊழி அறிஞர் மொழி ஞாயிறு தேவநேயம் பாவாணர் அவர்கள். உலக முதன்மொழி தமிழ்; இந்திய மொழிகளுக்கு மூலமும், வேரும் தமிழ்; திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் தோன்றிய இடம் குமரிக் கண்டமே; மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழ் நாகரிகமே என்பதும் பாவாணரது ஆய்வுப் புலத்தின் இரு கண்கள். 'தமிழ் வரலாறு' என்னும் இந்நூல், இயனிலைப் படலம், திரிநிலைப் படலம், சிதைநிலைப் படலம், மறைநிலைப் படலம், கிளர்நிலைப் படலம், வருநிலைப் படலம் என ஆறு படலங்களைக் கொண்டு திகழ்கின்றது. 'தாம் எழுதிய சில நூல்கள் மட்டும் வெளிவந்து விட்டால், தமிழர்கள் தெளிவு பெற்று விடுவார்கள் என்றும், தமிழ்நாடே மாறிப் போய்விடும் என்றும் நம்பின பாவாணரின் எண்ணத்திற்கேற்ப, அவர்தம் ஒப்பற்ற வரலற்றுக் கருவூலமான இந்நூலைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866