தமிழ் இலக்கிய வரலாறு

ஆசிரியர்: டாக்டர் ரா.சீனிவாசன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Pack
Pages 328
First EditionJan 2017
ISBN978-93-80217-75-8
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866டாக்டர் ரா. சீனிவாசன் பல நூல்களை எழுதியுள்ளார் அவற்றுள் தமிழ் இலக்கிய வரலாறும் ஒன்றாகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் புதிதாகத் திருத்தி எழுதப்பட்டது; இலக்கிய வரலாறு சுருக்கமாக அமையும் நோக்கில் கால அடிப்படையிலும், பொருள் அடிப்படையிலும் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. சிறப்பாகத் திறனாய்வு நூல்கள், புதுக் கவிதைகள், இதழ்கள், நாட்டுப்புறவியல் இலக்கியம் முதலியன சேர்க்கப்பட்டுள்ளன. நாவல், சிறுகதை, நாடகம் இம் மூன்றும் வரலாற்று அடிப்படையில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சங்க கால முதல் தற்காலம் வரை இலக்கியம் அடைந்துள்ள மாற்றங்களைத் தெளிவாக இது காட்டுகிறது.
இரட்டைக் காப்பியங்கள் சங்கமருவிய காலத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்று; ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தலைப்பில் இஃது இடம் பெறுகிறது. சிற்றிலக்கியங்கள் என்ற தலைப்பு நாயக்கர் காலத்தில் இடம் பெற்றாலும் அவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் வரலாற்று அடிப்படையில் தரப்பட்டுள்ளன. 'நாட்டுப்புற இலக்கியம்' என்ற கட்டுரை விவரமாகத் தரப்பட்டுள்ளது.
இப்பதிப்பில் தர்க்காலத்திற்கு ஏற்ப சில புதிய தலைப்புகள், அட்டவணைகள் எழுதி இணைக்கப்பட்டுள்ளது.அரசு வேலைவாய்ப்பு நுழைவுத் தேர்வுகளுக்கு இது பாடமாக உள்ளது.
இந்நூல் மேல்னிலை வகுப்பு மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் பயனுடையதாக அமையும்.

- பதிப்பகத்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :