தமிழ் அறிஞர்கள்

ஆசிரியர்: ஜனனி ரமேஷ்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
Formatpapper back
Pages 438
ISBN978-93-86737-47-2
Weight500 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் ' என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த பல அறிஞர்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவிஞர்கள், சிலர் தேச விடுதலைப் போராளிகள். சிலர் வழக்கறிஞர்கள். சிலர் பேராசிரியர் களாகவும் மொழியியல் ஆய்வாளர்களாகவும் திறனாய் வாளர்களாகவும் விமரிசகர்களாகவும் இருந்தவர்கள். விலை மதிப்பில்லா மூலப்பிரதிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்தவர்களும் அவற்றுக்கு அழகிய முறையில் உரை எழுதியவர்களும் அந்த உரைகளைப் பரவலாக மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தவர்களும்கூட இதில் இருக்கிறார்கள். இவர்களுடைய அடையாளம் தமிழ் என்றால் தமிழின் 'அடையாளம் இந்த அறிஞர்கள். தொல்காப்பியத் தமிழை இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள்தாம். இறையியல், இலக்கியம், கலாசாரம், வரலாறு, தத்துவம், அழகியல் என்று தொடங்கி ஒவ்வொன்றிலும் தமிழ் செழித்தோங்கி வளர்ந்ததற்கு இந்தத் தமிழறிஞர்களே காரணம். இவர்கள் இன்றி தமிழ் இல்லை. தமிழின்றி நாமில்லை, எனவே இது நம் புத்தகம்.

சட்டம், இலக்கியம், வரலாறு, வர்த்தகம், அரசியல், இதழியல் என்று பல துறைகளில் பட்டங்கள் பெற்றவர். தனது பதினான்காம் வயதில் அவர் எழுதிய முதல் சிறுகதை கோகுலம் இதழில் வெளிவந்தது. வானொலியில் இவருடைய சிறுகதைகள், கவிதைகள், பிரபலங்களுடனான நேர்காணல் ஆகியவை ஒலிபரப்பாகியுள்ளன. இதயம் பேசுகிறது, ஜூனியர் போஸ்ட், விகடன் பேப்பர், நாணயம் விகடன், அமுதசுரபி, ஆழம் உள்ளிட்ட இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளி வந்துள்ளன. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜனனி ரமேஷ் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :