தமிழ்த் தேசக் குடியரசு

ஆசிரியர்: பெ.மணியரசன்

Category
Publication தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹15.00 ₹14.25    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எமது தேசிய மொழி தமிழ் எமது தேசிய இனம் தமிழர் எமது தேசம் தமிழ்த்தேசம் எமது இலக்கு 'தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது; இதுவே தமிழ்த் தேசியம்.

இந்தியப் பெருமுதலாளிய - இந்தி ஆதிக்க பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் "இந்தியன்” என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அரசமைப்புச் சட்ட விதி 1 - இந்தியா அல்லது பாரதம் அரசுகளின் (States) ஒன்றியம் என்று தான் கூறுகிறது. இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும். அனைத்திந்திய இடதுசாரிகளும் "இந்தியன்” என்று ஓர் இனம் இருப்பதாக வதந்தி பரப்புகின்றனர். "தமிழர்", "தெலுங்கர்", "வங்காளி" என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை , 'இந்தியக் குடியுரிமை" என்று மட்டுமே அது கூறுகிறது. 'தமிழர்" போன்ற இயற்கையான, நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெ.மணியரசன் :

தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் :