தமிழோவியம்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 160
First EditionJul 2002
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெளி வந்துகொண்டிருக்கும் என் கவிதைத் தொகுப்புகளின் வரிசையில் ஒரு வேறுபட்ட தன்மையைக் கொண்டது இத் தமிழோவியம்.
தமிழன்பனைக்கூடக் 'கொஞ்சம் வெளியே இரு' என்று சொல்லிவிட்டு, தென்பாங்கும் தேனிசையுமாய் உள்ளம் திறந்தும் உதடுகள் திறந்தும் பாடும் மக்கள் இந்நூலுக்குள் சபையேறி உள்ளனர்.
இசையை அளவாக அனுமதிக்கும் பாக்கள் தம் இனங்களின் முகங்களைக் கண்டும் அவற்றின் சந்ததிகளின் சந்தச் சதங்கைகள் ஓசை கேட்டும் - உள்ளங்களில் உவப்பு ஊற்றுகள் திறந்து உற்சாகம் அடைகின்றன.
ஓசைக்கும் அளவு குறிக்கும் புதுக்கவிதை ஓய்வெடுத்துக் கொள்ள - ஓரிரண்டு நாள்கள் இந்நூலுள் கூடாரம் போடலாமா என்று யோசிக்கின்றன.
ஆம்! இது மரபுக்கவிதை நூலும் இல்லை; புதுக்கவிதை நூலும் இல்லை. சரிகமபதநிகளின் சந்திப்புக்கும், கை குலுக்கலுக்கும் காத்திருக்கும் உருப்படிகளுக்குத் தூரத்து உறவு என்று சொல்வதைவிட, தேன்சிந்தும் சிந்துகளுக்கு நெருக்கமான சொந்தம் என்று சொல்லலாம்.
- தமிழன்பன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :