தமிழும் சமற்கிருதமும் (சொல்லாய்வு நூல்) பகுதி-2

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 232
First EditionJul 2005
2nd EditionJan 2014
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தமிழும் சமற்கிருதமும் என்ற நூலின் இரண்டாம் பகுதியாக இந்நூல் அமைந்துள்ளது. சமற்கிருதத்தில் காணப்படும் ஏராளமான சொற்கள் தமிழ் மூலத்தையும் வேரினையுமே கொண்டுள்ளனவென்பதை இந் நூல் விளக்குகிறது. தமிழினின்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட சொற்களை திரிபுபடுத்தி, தமது ஒலிப்புக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்ட ஆரியர்கள், அச்சொற்கள் யாவும் மூலச்சொற்களே என்றும், வேறு எம்மொழியினின்றும் அவை எடுத்துக் கொள்ளப் படவில்லையென்றும், அம்மூலச் சொற்களே பிறமொழிகளில் எடுத்துக் கொள்ளப்பட்டனவென்றும் திரும்பத்திரும்பக் கூறி அதனைப் பதிவுசெய்தும் நிலைப்படுத்தினர். மக்களுக்குச் சமயத் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பிராமணர்கள் கூறுவது உண் மையே என மக்களும் நம்பினர். நம்பிக்கையின் அடிப்படைகளிலேயே சமற்கிருதம் சிலரால் தேவமொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட து.ஆரியர்கள் தங்கள் வரலாற்றைக் கூறாமல் மறைத்து, கற்பனைக் கதைகளால் தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்தனர். இக்கதைகள் யாவும் ஆரியர்களது பின்னணிகளைப் பற்றிய செய்திகளைத் தராமல், இந்தியச் சூழல்களில் அமைந் தவைகளாகவே இருந்தன. இக்கதைகளைத் தொடர்ந்து உபநிடதங்கள் என்ற வேத விளக்கங்கள் வெளியாயின. இவை துணை நூல்கள் அல்லது முதனூலுக்கான விளக்கங்கள் என அறியப்படும், இவை வேதங்களின் மெய்யியல் கொள்கைகளை விளக்கிக் கூறுவனவாகும். எண்ணிக்கையில் 250க்கு மேற் பட்டவையிருந்தாலும், 32 நூல்கள் சிறப்பாகக் கருதப்பட்டன. இவைகள் யாவும் தமிழரின் மெய்யியல் கொள்கைகளின் அடிப்படையில் சொல்லப்பட்டவைகளாகும், உபநிடதங்கள் பிற்காலத்தில் ஆறு கோட்பாடுகளை உள்ளடக்கியவைகளாக அமைந்தன. வேதாந்தம், மீமாம்சம், சாங்கியம், ஓகம், நியாயம், வைசேடிகம் என்பவைகளே அப்பகுப்புகளாகும்.
மொழி என்பது மாந்தனின் உள்ளக்கிடக்கையை மற்ற வர்க்கு உணர்த்தப் பயன்படுவதாகும். மொழியை எவரும் தோற்றுவிக்கவில்லை. இயற்கையிலேயே எழுந்த உணர்வு களின் அடிப்படையில் வெளிப்போந்த ஒலிகளே பிற்காலத்தில் மொழியாயிற்று. அவ்வொலிகள் இயற்கையின் படைப்புக் கான மாந்தர், விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்றவை களாலும், இடி, மின்னல், மழை, ஆற்றோட்டம், கடலலைகள், மரங்களின் அசைவுகள் போன்றவைகளாலும் அறியப்பட்ட வைகளே எனலாம். விலங்குகளின் ஒலிகள், ஒரு சீராக வெளிப் படுத்தப்படுவனவேயன்றி, மாந்தன் போல் மாற்றியொலிக்க , அவை அறியா. எனவே, மாந்தனே மொழியின் கண்டுபிடிப்பாளன் ஆவான்.

உங்கள் கருத்துக்களை பகிர :