தமிழும் ஆரியமும்

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 230
First EditionJan 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$8.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய நூல்கள், உலகின் முதன் மொழி தமிழே என்பதை மொழியியல், புவியியல், வானியல், எண்ணியல், சமயவியல், சமூகவியல் என்றவாறு பல்வேறு கண்ணோட்டங்களில், உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தி ருந்தன. ஒரு மூத்தமொழி, அது தமிழைத் தவிர வேறெந்த மொழி யாக இருக்கமுடியும்! உலகில் அறியப்பட்ட, அறியப்படும் மொழிகளுக்கான தோற்ற காலத்தை, ஆய்வாளர்கள் ஓரள விற்கு உணர்ந்து உறுதி செய்துள்ளனர். தமிழ்மொழியின் தோற்ற காலம் பற்றி எவரும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.பல்வேறு இயற்கையின் ஒலிகளை உள்வாங்கிக் கொண்டு, இயல்பாய்த் தோன்றிய மொழியே தமிழ்மொழியாகும், பல்லா, யிரம் ஆண்டுகளில் புதுப்புது சொற்களை உருவாக்கிக் கொண்டு, வளர்ந்துள்ளது. தமிழ்மொழி பேசப்பட்ட தொன்மைக் காலத் தில், வேறு மொழிகள் எவையும் அறியப்படவில்லை. தற்காலத் தில் மொழியியல் அறிஞர்கள். ஒரு மூப்புடைய மூலமொழியி னின்றே இன்று உலகெங்கும் பேசப்படும் மொழிகள் தோன்றிக் கிளைத்ததாகக் கூறுகின்றனர். அந்த மூலமொழி எதுவென்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றாலும், அம்மொழி தமிழாகவும் இருக்க வாய்ப்புகளுண்டு என்பது அண்மைக்கால ஆய்வாளர்களின் கருத்து. இவ்வாறான கருத் தினை கடந்த நூற்றாண்டுகளில் ஆய்வாளர்கள் கொண்டிருக் கவில்லை .
தமிழும் ஆரியரும் என்ற தலைப்பு, தமிழர்களையும் ஆரியர்களையும் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விளக்கும் தலைப்பாகும். உலக வரலாற்றில் பாபிலோனியர், கல்தே யத்தார், சுமேரியர், எபிறேயர், போன்ற இனத்தாரின் தொன்மைக் கால வரலாறு இன்றுவரையிலும் கூடத் தெளிவாக்கப்பட வில்லை என்பதுபோல், ஆரியர்களின் வரலாறும் கமுக்கப் புதிராகவே உள்ளது. ஆரியர்களுடைய வருகையை யொட்டிய கால அளவைக் கொடுக்கும் வரலாற்றாய்வாளர்கள், அவர் களது இனம் பற்றிய தொன்மைச் செய்திகளை விளக்கிக் கூற வில்லை. எப்படியிருப்பினும் ஆரியர்கள் இந்தியாவின் தொன் மக் குடிகள் அல்லர் என்ற கருத்து ஏற்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :