தமிழுக்கு நிறம் உண்டு
ஆசிரியர்:
வைரமுத்து
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?id=1671-3454-3366-1339
{1671-3454-3366-1339 [{புத்தகம் பற்றி நாகரிகத்தின் படி நிலைகள் ஐந்தென்பர் அறிஞர். வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் - கால்நடை மேய்த்தல் - கடல் மேற்சேரல் - உழவுசெய்தல்.

இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம்.

நாகரிகத்தின் இந்த ஐந்து படிநிலைகளுக்கும் தமிழரிட்ட புனை பெயர்கள்தாம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி தொடங்கி பூமியின் முகம் மாறத் தொடங்கிய காலகட்டம் வரைக்கும் உலகத்தின் எந்த நாகரிகமும் தமிழரிட்ட இந்தக் கோடுகளைக் கடக்கவேயில்லை.

கி.பி. 127-இல் இந்த பூமி என்னும் கோள்தான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் சூரியனே இதைத்தான் சுற்றி வருகிறது என்றும் உண்மைக்கும் புறம்பான முடிவுகளைத் தாலமி உலகுக்கு அறிவிக்குமுன்பே ஐம்பூதங்களின் மயக்கமே இவ்வுலகம் என்று கண்டு ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்வரை புலன்களின் அளவுகோல் கொண்டு இனம் பிரித்த இனம் தமிழினம்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866