தமிழின் நவீனத்துவம்

ஆசிரியர்: பிரமிள்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaperback
Pages 192
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சி. சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலத்தையும் தோற்றுவித்த பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, ந. பிச்சமூர்த்தி முதலான ஆளுமைகள் பற்றியும் தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் மிக நுட்பமான அவதானிப்புகள் அடங்கிய கட்டுரைகள் இவை. இலக்கிய விமர்சனம் என்னும் துறை விமர்சனக் கோட்பாடுகளால் ஆனது என்பதையும் எப்படி இலக்கியம் விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்பதையும் பயிற்றுவிப்பவை இக்கட்டுரைகள்.

பிரமிள் இக்கட்டுரைகளின் வழியாகத் தோற்றுவித்திருக்கும் உரைநடை தமிழுக்குப் புதிய வளமும் முகமும் உருவாக்குபவை. அதோடு பிரமிளின் அறிவின் ஆழத்தையும் அகலத்தையும் வெளிப்படுத்துபவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரமிள் :

கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :