தமிழர் வீரம்

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category உரைநடை நாடகம்
FormatPaper back
Pages 86
ISBN978-81-2343-955-0
Weight350 grams
₹55.00 $2.5    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'தமிழர் வீரம்' என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன்; படித்து உவகையுற்றேன். இவ்வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக்கழகத் தலைவராம் திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் சொல்லின் செல்வர்' என வளமலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும் நூல் எதுவும் தமிழகம் முழுவதும் செல்லும் நாணயம்; நூல் நோட்ட வண்ணக்கர் மதிப்பு பாராட்டும் வேண்டாமல் செலாவணியாகும் கலா உண்டியல். இந் நூலுக்கு முகவுரை எழுதித் தகவுபெறுமாறு என்னைத் தூண்டியது என்பால் இவர்கள் கொள்ளும் அன்பைக் காட்டும்.
தமிழில் சிறந்த செய்யுட்கள் எல்லாம் அகம், புறம் என்னும் பொருட் செல்வக் கருவூலங்களாகும். அகப்பொருள் நூல்கள் அனைத்தும் காதற் களஞ்சியங்கள். புறப்பொருள் நூல்களில் பழந் தமிழரது பேராண்மையும் அவரது போர் அறத்துறையும் பேசப்படும். தமிழ்ப் பொருநர் வீரம், இகலார் மேற் படையெடுக்கும் இழிவை இகழும்; வெற்றி வெறியிலும் வீழ்வாரை நலியும் சிறுமையை வெறுக்கும். தமிழர் போர் அற ஒழுக்கம், வெட்சி-வஞ்சி -உழிஞைதும்பை - வாகை என்றைந் திறப்படும். பகைவரை எச்சரியாமல் மெய்வீரர் போர் தொடங்கார். அவ் வெச்சரிப்பின் பொதுவகையே வெட்சித் திணை(ஒழுக்கம்) ஆகும். படையெடுப்பு வஞ்சி எனப்படும். பகைவர் அரணழித்தல் உழிஞை. பொருகளத்தில் எதிர்த்துப் போர் புரிதல் தும்பை. முடிவில் வெற்றி மாலை மிலைவது வாகை. இப்போர் ஒழுக்கம் ஒவ்வொன்றும் இடங்காலங்களுக்கேற்பப் பலதிறத் துறை வகுத்து நடக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

உரைநடை நாடகம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :