தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 208
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




மனிதன் மிகப் பழைய காலத்திலேயே காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். இருக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் அக்காலத்திலே மனிதன், விலங்குபோல அலைந்து திரிந்தான். பிறகு அவன் மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக நாகரிகம் அடைந்தான். வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரிந்துகொண்டான். இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரிக வாழ்க்கை பெற்றான். ஆனால், மனிதன் நாகரிக வாழ்க்கை அடைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்ட பல வகையான தொழில்களேயாகும். ஒவ்வொரு தொழிலையும் கற்றுத் தேர்வதற்கு அவனுக்குப் பல நூற்றாண்டுகள் கழிந்தன. மனிதன் நாகரிகம் பெறுவதற்குப் பேருதவியாக இருந்தவை அவன் சிறிதும் சிறிதாகக் கற்றுக் கொண்ட பல வகையான தொழில்களேயாகும். ஒவ்வொரு தொழிலையும் கற்றுத் தேர்வதற்கு அவனுக்குப் பல நூற்றாண்டுகள் கழிந்தன! (மனிதன், மிருக வாழ்க்கையிலிருந்து நாகரிக வாழ்க்கை யடைந்த வரலாற்றைக் கூறும் நூலுக்கு ஆந்த்ரபாலஜி (Anthropology) என்பது பெயர். இந்நூல்கள் ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளில் எழுதப் பட்டுள்ளன)

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :