தமிழர் திருமணம்
ஆசிரியர்:
ம.பொ.சிவஞானம்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1122-8960-5456-7240
{1122-8960-5456-7240 [{புத்தகம் பற்றி தமிழர் திருமணம் எனும் இந்நூலில் மதவழித் திருமணம், சுயமரியாதைத் திருமணம். பதிவுத் திருமணம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் ம.பொ.சி., தொல்காப்பியத்தில் திருமணம் பற்றிச் சொல்லியிருப்பதையும் சொல்லி, இலக்கிய வழியான சமூகப் பார்வையை முன்வைத்துள்ளார் -தமிழகத்தில் மதவழி மக்கள் பிரிந்திருப்பினும்கூட, 'தாலி' என்னும் அணி தமிழர்களை ஒன்றிணைப்பதையும், 'தாலி தமிழருடையதே என்பதைத் தரவுகளுடன் இலக்கியங்களை மேற்கோளிட்டு பேசியிருக்கிறார்.ஒவ்வொரு மதத்திலும் புரோகிதம் இருப்பதையும், அதன் மொழி பற்றிச் சொல்வதுடன் தமிழ்நாட்டில் புரோகித எதிர்ப்பியக்கம் இருப்பதையும் பதிவு செய்கிற ம.பொ.சி. எல்லாச் சாதியினருக்கும் அது உரிமையாக்கப்பட வேண்டும் என்பதோடு, புரோகித எதிர்ப்பியக்கம் தோல்வியுற்றதற்கான காரணங்களையும் அலசியிருக்கிறார் திருமணத்தைப் பற்றிப் பேச வந்த நூல்தானே என, திருமணத்தைப் பற்றி மட்டும் பேசிச் செல்லாமல், சார்ந்பிரச்சனைகளான வரதட்சணை மறுமணம், கலப்பு மணம் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார். இவை பற்றியும் இலக்கியக் குறிப்புகளை எடுத்துப் பரத்தி விவாதிக்கிறார். மதவழிப்பட்ட சிக்கல்கள் பற்றிச் சிந்தித்திருப்பதுடன் அதில் இனவழி உணர்வு பற்றியும் எடுத்துரைக்கிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866