தமிழருவி
₹70.00 $3 (5% OFF)

தமிழருவி

ஆசிரியர்: தமிழருவி மணியன்

Category அரசியல்
Pages N/A
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் வாசகர்களுக்கு தமிழருவி மணியன் புதியவரல்ல. இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு சமூக விஞ்ஞானியும்கூட! சிறந்த சிந்தனையாளரான தமிழருவி மணியன், அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் பற்றியும், நேர்மையற்ற அரசியல்வாதிகள் பற்றியும் எழுதி, தமிழக மக்களை மாற்றம் வேண்டும்! என வீறுகொண்டு எழச் செய்தவர்.
ஊழல்கள் புரையோடிப் போயிருக்கும் அரசியலுக்குத்தானே அறுவை சிகிச்சை தேவை! ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால் பாதிக்கப்படுவது அந்தக் குடும்பத்தினர் மட்டுமே. ஆனால், அரசியலில் நுழைந்து, பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுபவது நாடும், நாட்டு மக்களும்தான்! என, அரசியலில் உள்ள அழுக்கை நீக்க, கட்டுரைகளில் இவர் வைக்கும் வாதங்கள் ஆணித்தரமானவை.
ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், இதழ்களில் இவர் எழுதிய விழிப்பு உணர்வுக் கட்டுரைகள், கடிதங்கள், பேட்டிகள், விகடன் மேடை பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் ஆகியவற்றுடன், அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை என்ற கட்டுரைத் தொடரும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இப்போது உங்கள் கைகளில் மிளிர்கிறது.
எப்பேர்ப்பட்ட பதவிகளில் இருந்தாலும், அவர்கள் செய்யும் தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்டு இவர் எழுதிய கட்டுரைகளும், மக்களின் மனதை மேம்படுத்தும் கலாசாரம், பண்பாடு பற்றிய கட்டுரைகளும் விகடன் வாசகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றன.
குற்றால அருவி யில் குளிப்பது மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, மூலிகைகளை அள்ளிக்கொண்டு வரும் அருவி நீர், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. அதைப் போல இந்த
தமிழருவி வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமல்ல, அதனைச் செயல்படுத்தி பலனையும் பெற உதவுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழருவி மணியன் :

அரசியல் :

விகடன் பிரசுரம் :