தமிழக நாட்டுப்புறக் கதைகள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 160
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இனப்பெயர்கள் சில கதைகளில் காணப்படுகின்றன. அவை, தவிர்க்க முடியாதனவாகும். ஏனெனில், 'செவிவழிக் கதைகள்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
'கிராமியக் கதைகள்' என்பதற்காக, பேச்சு நடையைப் பயன்படுத்தாமல், எழுத்து நடையையே பெரும்பாலும் கையாண்டிருக்கிறேன்.
கேரளத்தில் பிறந்து, இராணுவத்தில் பணியாற்றி, இந்தியா முழுவதும் சுற்றி வந்து, துறவு பூண்ட சுவாமி கிருஷ்ணா , என்னைக் காண வரும்போது உற்சாகமாக பல கதைகள் கூறுவதில் மகிழ்ச்சி அடைவார். நானும் ஆர்வத்தோடு அவற்றை அவ்வப்பொழுது எழுதி வைத்தேன்.
சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் புலமை வாய்ந்த மதிப்பிற்கு உரிய பெரியவர் நாராயண ஐயர் அவர்களை நான் காணும்பொழுதெல்லாம், சிரிக்க சிரிக்கக் கதைகள் கூறி மகிழ வைப்பார்.
இவ்வாறு பிறர் சொன்னவை, நான் படித்தவை, நாற்பத்து ஐந்து ஆண்டுகளாக, என் நினைவில் இருந்தவை ஆகியவற்றை இதில் எழுதியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :