தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

ஆசிரியர்: அ இராகவன்

Category ஆய்வு நூல்கள்
FormatPaperback
Pages 168
Weight250 grams
₹160.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழர்களுக்கு அல்லது இந்திய மக்களுக்கு எந்தனையோ இன்னல்கள் நேரலாம். அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்படவில்லை.ஆனால் அவர்கள் எந்த நாட்டிலும் இழிவு தரும் முறையில் நடந்து கொள்ளவில்லை. இந்தியவர்கள் சூழ்ச்சி முறையினாலோ ஆட்சி வலிமையாலோ பிற நாட்டை அடிமைப்படுத்தி அந் நாட்டைச் சுரண்டி வாழ்கின்றார்கள்; இந்தியர்கள் நாட்டாசை கொண்டவர்கள் என்ற பெயரை எடுக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழகர்கள் பண்பாடு மிக்கவர்களாய் வாழ்ந்து வருகின்றார்கள். கிழக்காசியாவில் இலட்சக்கணக்கான மக்கள் குடியேறி அந்த நாட்டைத் தாய் நாடாகக் கொண்டார்கள். அந்த நாட்டில் தங்கள் சமயம் பண்பாடு, நாகரிகம், கலை முதலியவைகளைப் பரப்பினார்கள்.
தாங்களும் தங்களின் கலை, பண்பாடு, நாகரிகம், சமய முதலியவைகளும் அந்நாட்டு மக்களோடும் சமயத் தோடும் பண்பாட்டோடும் இரண்டறக் கலந்து இன்று இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாத வண்ணம் கலந்துவிட்டார்கள். இஃது இன்று சாவகத்தில் காணக்கிடக்கும் மறுக்க முடியாத உண்மை.தமிழகர்களைச் சாவக மக்களினின்று இன்று பிரித்துக் காண எவராலும் முடியாது. ஆனால் வரலாற்றிலேதான் இந்த உண்மையைக் காணமுடியும். அதோடு சாவகத்தின் பல்வேறு மூலை முடுக்குகளிலும் தமிழகர்கள் அல்லது பாரத நாட்டு மக்கள் பாலில் சீனி கரைதல் போல் அந்நாட்டு மக்களோடு கலந்து போனதன் அடிச்சுவடுகளை இன்று காணமுடியும். எத்தனையோ மாறுதல்களுக்கும் அழிபாடுகளுக்கும் ஆட்பட்ட போதிலும், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த போதிலும் நம் கலைகளும் தெய்வங்களின் உருவங்களும் பெயர்களும் இன்னும் தம்மைச் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ இராகவன் :

ஆய்வு நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :