தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்

ஆசிரியர்: திருப்பூர் குணா

Category இஸ்லாம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1998 கோவை குண்டுவெடிப்பு மற்றும் அதற்கு முன்னும், பின்னுமாக நடந்த அசம்பாவிதங்களின் பொருட்டு தமிழர்கள் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். காரணம், அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவோ, அரசுக்கு எதிராக சதிகள், செய்யவோ இல்லை. மாறாக, உலகமயமாக்கலுக்கு எதிராக மக்களும், மக்கள் இயக்கங்களும் போராடியபோது அவற்றை திசைதிருப்ப இந்துத்துவ இயக்கங்கள் இந்தியா முழுவதும் இசுலாமிய எதிர்ப்பு நடவடிக் கைகளை கட்டவிழ்த்துவிட்டன. அவைகள் வடக்கே பாபர் மசூதியை முதன்மையாக குறிவைத்ததுபோல், தமிழ்நாட்டில் வேறுசில நடவடிக்கைகளை முதன்மைப் படுத்தின. அது கன்னியாகுமரியில் கிருத்துவர்களை தாக்கும் நடவடிக்கையாகவும், கோவையில் 'இசுலாமியரை தாக்கும் நடவடிக்கையாகவும் இருந்தது.

“தமிழகம் தன் இஸ்லாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்!” நூலின் தலைப்பு, உங்கள் பிள்ளைக்கு நீங்கள் நல்லது செய்யுங்கள் என ஒரு தாயிடம் பிறர் வேண்டுகோள் வைப்பதாகவே அமைந்துள்ளது. பசியறிந்து பாலூட்டுகிறவரல்லவா அன்னை ? அவரிடமே உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவுங்கள் என்று பிறர் கோரிக்கை வைப்பது என்பது தாயின் போக்கில் உள்ள கோளாறையும், மாற்றாந்தாய் மன போக்கையும் உணர்த்திவிடுகிறது. இங்கு தாயாக பாவிக்கின்ற தமிழகம் என்ற சொல் மண், மலை, மரம், விலங்குகளை குறிக்கும் சொல் அல்ல. மாறாக, அதில் வாழும் மக்களையும் அவர்களது உளவியல் திரட்சியையும் சேர்த்துக் குறிப்பிடும் சொல்லே ஆகும். ஆக, தமிழக ஒட்டுமொத்த மக்களிடமும், அவர்களுக்கான மக்கள் இயக்கங்களிடமும்தான் "இஸ்லாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேச வேண்டும்”.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருப்பூர் குணா :

இஸ்லாம் :

பொன்னுலகம் பதிப்பகம் :