தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை...
₹110.00 ₹104.50 (5% OFF)

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை...

ஆசிரியர்: சி.இளங்கோ

Category ஆய்வு நூல்கள்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழகத்தின் பண்பாட்டு வரலாறு குறித்த முக்கியமான ஆய்வுநூல்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் சி.இளங்கோ. அவரது ‘தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்- கீழடி வரை...’ நூல், தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அரிக்கமேடு, கொடமணல், ஆதிச்சநல்லூர் முதலான தொல்லியல் ஆய்வுகளையும், கீழடியைப் போலவே ஆய்வுசெய்யப்பட வேண்டிய முக்கியமான தொல்பொருள் களங்களையும் பட்டியலிட்டிருக்கிறது. பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், அகழ்வாய்வில் கிடைக்கும் மட்பாண்டப் பொருட்கள், ஈமப் பேழைகள், நாணயங்கள் என்று வரலாற்றுச் சான்றாதாரங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

- தி இந்து.

மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்கும் தமிழர்களின் நகர நாகரிகத்தை வெளிக் கொண்டு வர கடப்பாரை எடுக்க விடமாட்டோம் என்று அடம்பிடிக்கிறது. தொல்லியல் ஆய்வு நம்மை நாமே அடையாளம் காண எவ்வளவு முக்கியமானது என்பதை உணர இந்த நூல் உதவும்
- மயிலை பாலு.

தங்கம் வெள்ளி செம்பு இரும்பு போன்ற உலோகக் கனிமங்கள் மண்ணுக்குள் இருக்கின்றன. நிலக்கரி, கச்சா எண்ணெயும் மண்ணைத் துளைத்துதான் எடுக்கப்படுகின்றன. இதற்காக அரசுகள் போட்டிப் போடுகின்றன. இந்த வளங்களைச் சுரண்டு வதற்கு வனப்பகுதிகளிலிருந்து பழங்குடி மக்கள் விரட்டப்படு கின்றனர். சண்டைகள் மூள்கின்றன. மக்கள் சாகடிக்கப்படுகிறார் கள். லஞ்ச ஊழலுக்கும் ஊற்றுக் கண்கள் உருவாகின்றன. மண்ணுக்குக் கீழே மற்றொன்றும் இருக்கிறது. பண்டைக்கால மனிதகுல நாகரிகம். அவர்கள் பயன்படுத்திய பொருள்கள். பழக்கம் வழக்கங்களைக்காட்டும் குறியீடுகள். செத்த பிறகும் மனிதர்களைப் பாதுகாப்பதுபோல் புதைக்கப்பட்ட தாழிகள். பழைய கற்காலம், புதிய கற்காலம். நுண்கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் எனப் பகுத்துப் பார்க்கும் அளவுக்குப் பூமிக்கு உள்ளே புதைந்துகிடக்கும் பொருள்கள், கட்டுமானங்கள், அவற்றின் வடிவமைப்புகள் என நாம் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் காண வேண்டும் என்ற முனைப்போ பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியோ அரசுகளுக்கு எவ்வளவு இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இளங்கோ :

ஆய்வு நூல்கள் :

அலைகள் வெளியீட்டகம் :