தமிழகச் சிற்பங்களின் பெண் தொன்மம்

ஆசிரியர்: பெ.நிர்மலா

Category அரசியல்
FormatPaper Pack
Pages 143
ISBN978-93-92213-06-9
Weight500 grams
₹280.00 $12    You Save ₹14
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மானுட வரலாற்றில் கலைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. அவற்றில் காட்சிக்கலைகள் தனியிடம் பெறத்தக்கன. முப்பரிமாணத் தன்மையுடைய சிற்பக்கலை காட்சிக்கலைகளில் சிறப்பிடம் பெறத்தக்கதாயுள்ளது. சிற்பங்கள் பண்பாட்டு வடிவங்களாக, வரலாற்றுச் சான்றுகளாக, அழகியலோடு தொடர்புப்படுத்தப்பட்ட காட்சிப்பொருள்களாக அமைந்துள்ளன. மானுடத்தின் அழகியல் வெளிப்பாடாக மட்டுமின்றி கருத்து நிலையையும் இணைத்தே வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதையும் நிதானிக்க முடியும்.
அரசியல், பொருளாதாரம், கருத்து நிலை ஆகிய மூன்று செயற்பாடுகளும் சமூகத்தின் அடிப்படைகளாகத் திகழ்கின்றன. இவற்றில் அதிகக் கவனத்திற்குரியது கருத்துநிலை செயல்பாடே பால் அடிப்படையிலான சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த புனைவுகள் சமூகத்தில் நிலவி வருகின்றன. இந்தக் கருத்து நிலைகள் சிற்பங்களிலும் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளைப் பெண்ணியக் கருத்து நிலையில் அலசுவது இன்றைக்குத் தேவையாய் உள்ளது. இதுவரை தமிழகத்தில் பொதுவாகச் சிற்பங்கள் இப்பார்வையில் அணுகப்படவில்லை என்பதும் கவனத்திற்குரியது. எனவே தமிழகச் சிற்பங்களைப் பெண்ணிய நோக்கில் இவ்வாய்வு அணுகுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெ.நிர்மலா :

அரசியல் :

அலைகள் வெளியீட்டகம் :