தனிமையின் கடைசிச் சொல்

ஆசிரியர்: ஆதி பார்த்தீபன்

Category கவிதைகள்
Publication புது எழுத்து
FormatPaper Back
Pages 92
First EditionDec 2019
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஜீவவிருட்சத்தின் கிளைகள் போல
பரந்து எழுகின்றவுன் உரையாடலின் திண்மையில் வந்தமர்ந்து
பழங்களை கொத்தி இனிமை யுறிஞ்சி
பசிதீர்ந்தவதன் அலகை பட்டைகளில் நீவுகின்றதென் எண்ணப்பறவை
உனது உரையாடலின் தனிமை
மரத்தின் தீராநிழல்
துளிர்த்தலின் ஜனன ஒலிக்குள் சட்டென
மறைந்து போகின்றதிப் பறவையின் கேவல்
இப்படியாரம்பிக்கின்றது உனது உரையாடலின் தனிமை அல்லது
சத்தத்தின் நிறைதல்
உனது மொழியசைவு அல்லது சொற்பரம்பல்
அயற்சியுற்ற ஒருநாளில் ஒளடதமாக
நரம்புக்கணுக்களில் ஊற்றெடுக்கிறது
தீர்ந்துபோன உரையாடலின் முற்றுப்புள்ளி
தனித்திருக்கும் ஒரு பொழுதில்
கவிதையின் ஆரம்பித்தலெனப் பிரவகிக்கிறது
தவிர்க்கவியலாதவுன் உரையாடல்களை
காற்றில் எறிந்தபின்னும் ஏதோவொரு கிளையில்
மோதிக்கழன்றவதன் இறகு மெல்லவென் தலையை வருடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

புது எழுத்து :