தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை

ஆசிரியர்: போதி பிரவேஷ்

Category இல்லற இன்பம்
Publication போதி பிரவேஷ்
FormatPaperback
Pages 442
ISBN978-93-80800-42-4
Weight600 grams
₹520.00 ₹468.00    You Save ₹52
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்தியா என்கிற புனித பூமியின் பெருமைகளில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு, தன்னுடைய பயணத்தை நூல் துவக்குகிறது. இவ்வாறு துவக்க வேண்டியது இந்த நூலின் கடமை. ஏனெனில், பண்டைய இந்தியப் பெருமைகளில் முதன்மையாகத் திகழும் ஒரு ஞானத்தைத் தழுவியே இந்நூல் எழுதப் பட்டுள்ளது. அதற்கான நன்றியறிவிப்பே இந்த முன்னுரை. -
- பிரபஞ்சத்தைப் பற்றியோ, இயற்கையைப் பற்றியோ அல்லது மனித உடலைப் பற்றியோ படிக்க வாய்ப்புக் கிடைக்கும் போது, படைப்பின் மகிமையைக் கண்டு ஏற்படக் கூடிய மலைப்பும், வியப்பும் அளவிட முடியாதவை. அதே போலத் தான் இந்திய மண்ணின் பெருமைகளை அறிய நேரும் போதும் வியப்பும், மலைப்பும் ஏற்படுகின்றன. இதோ நீங்களே கூட அந்தப் பட்டியலின் மிகச் சிறிய பகுதியொன்றைப் பாருங்கள்,
சூரிய மண்டலம் நவ கிரகங்களைக் கொண்டது. கோள வடிவான கிரகங்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றிய படி சூரியனையும் சுற்றி வருகின்றன என்கிற உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்த நாடு இந்தியா. பூகோளம் என்கிற வார்த்தையே சாட்சி.
மேற்கண்ட உண்மையைக் கூறியவர் ஆர்ய பட்டர். அவர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். ஐயமிருப்பின் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட எந்தவொரு இந்துக் கோவிலிலும் அமைக்கப்பட்டுள்ள நவகிரக சிலைகளை எண்ணிப் பாருங்கள். -
கி. பி. அறுநூறுகளில் தோன்றிய வராகமிஹராம் என்கிற முனிவரால், "பஞ்ச, சித்தாந்திகா" என்கிற நூலிலும் மேற்கண்ட சூரிய மண்டல உண்மைகள் 11 தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தான் பஞ்சாங்கம் கணிக்கப் படுகிறது.
- அடுத்து பதினோறாம் நூற்றாண்டில், தோன்றிய பாஸ்கராச்சார்யா என்கிற கணித மேதையால் லீலாவதி என்கிற நூலிலும், மேற்கண்ட தகவல்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
சூரிய மண்டலம் நவ கோள்களைக் கொண்டது. இதில் சூரியனே மையம். மற்ற கோள்களனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதில் சந்திரன் பூமியையும் சேர்த்து சுற்றிக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு சுற்றிக் கொண்டிருப்பதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. கிரகங்கள் தட்டையாக இருக்குமானால், இது போல் ஒன்றையொன்று மறைக்க முடியாது என்று ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சந்திரனின் விட்டத்தை நூற்றியெட்டால் பெருக்குங்கள். துல்லியமான தூரத்தைத் தெரிந்து கொள்ளலாம். - அதே போல, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சூரியனின் விட்டத்தை நூற்றியெட்டால் பெருக்குங்கள். துல்லியமான தூரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.


பதினெட்டு ஆண்டுகளில் ஏறக்குறைய ஐந்தாண்டுகள் புற உலகோடு எனக்கிருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு, புத்தகப் புழுவாகவே நான் வாழ்ந்திருக்கிறேன். அப்போது ஏராளமான நூல்களை வாசித்திருக்கிறேன், ஒவ்வொரு நூலின் கருத்தையும் உள்வாங்கி, அலசி ஆராய்வதற்குரிய விதிகளின் படி வாசித்திருக்கிறேன். அதனால் ஏராளமான தகவல்கள் என் ஆழ்மனதில் பதிவாகியுள்ளன. ஆனால், எந்த நூலின் வாயிலாக எந்த அறிவைக் கற்றுக் கொண்டேன், எந்தத் தாக்கத்தைப் பெற்றேன் என்பதை மட்டும் என்னால் நினைவு கூற முடிவதில்லை. ஆகவே உலகில் இதுவரை தோன்றி மறைந்துள்ள, என் சம் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து நூலாசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நூலைத் துவக்குகிறேன். சட்டபூர்வ எச்சரிக்கை.

உங்கள் கருத்துக்களை பகிர :
இல்லற இன்பம் :