தந்தை பெரியார் முழுமுதல் வாழ்க்கை வரலாறு

ஆசிரியர்: கவிஞர் கருணானந்தம்

Category வாழ்க்கை வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatHard bound
Pages 596
Weight1.12 kgs
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் யார்? ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்அந்தத் தொண்டு செய்ய எனக்கு “யோக்கியதை' இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன் ... "இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லாருக்குமே அரசியலில்தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால் எல்லா மக்களும் பயப்படுகிறார்கள், பதவி கிடைக்காதே என்கிற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்லவேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு, பலபதவி, சில உத்தியோகம் பெறநேர்ந்ததோடு, அரசியலில் பார்ப்பனரின் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்க முடிந்தது என்பதல்லாமல், சமுதாயத்துறையில் உள்ள அடிப்படை இழிவு, அப்படியே தங்கி, நல்ல அளவுக்குப் பலமும் பெற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கருணானந்தம் :

வாழ்க்கை வரலாறு :

விஜயா பதிப்பகம் :