தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்
₹500.00 ₹475.00 (5% OFF)

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்

ஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்

Category பகுத்தறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatHardbound
Pages 688
Weight900 grams
₹500.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தந்தை பெரியாரின் சிந்தனைகள் புலவர் த.கோவேந்தன் அவர்களால் தொகுக்கப்பட்டு “ தந்தை பெரியார்சிந்தனை களஞ்சியம்”என்னும் பெயரில் இரு தொகுதிகளாக பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ளது. கூர் தீட்டப்படாத கத்தி துருப்பிடித்துப் போவதைப் போல புதுப்பித்துக் கொள்ளாத அறிவும் புரையோடிப் போகுமன்றோ ? அதுபோல தந்தை பெரியாரின் சிந்தனைகளால் விழிப்புற்று நிமிர்ந்தெழுந்த தமிழன் மீண்டும் முடமாகிப் போய்விடக் கூடாது என்பதற்காகவும், அவற்றின் தேவை கருதியும் அச் சிந்தனைத் தொகுப்புக் களஞ்சியம், புலவர் த. கோவேந்தன் அவர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் இப்பொழுது ஒரே தொகுதியாக எமது பதிப்பகத்தின் மூலம் மீண்டும் வெளிவருகிறது. பெரியார் என்ற சூரியன் இங்குத் தோன்றியதால்தான் தமிழினம் விழிப்புற்றெழுந்து அறிவுப் புரட்சிக்குத் தனது பங்கினை ஆற்றிவருகிறது. அத்தகைய அறிவுப் புரட்சி மேலும் மேலும் ஒளிவீசி உலகத்தின் மனிதநேயச் சிகரத்தை எட்ட வேண்டும்.
உணர்வுடையோர் ஒவ்வொருவரும் படித்து மகிழவேண்டிய சிந்தனைக் களஞ்சியம். தன்மானத்துடன் வாழக் கற்றுக் கொடுக்கும் தனித்துவம் வாய்ந்தது. எனவே வாசகப் பெருமக்கள் தந்தை பெரியாரின் சிந்தனைச் சுடரை ஏற்றி, உலகை ஒளி மயமாக்க முயற்சி செய்வார்கள் என நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் த. கோவேந்தன் :

பகுத்தறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :