தண்டியலங்காரம்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 224
Weight300 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்பது ஆன்றோர் வாக்கு ஆகும். அறிவை அறிதற்கும் மற்றோர்க்கு அறிவித்தற்கும் கருவியாக விளங்குவது மொழியாகும். உலக மொழிக்குள் செவ்வியதொன்றாகத் திகழ்வது நம் தமிழ்மொழி ஆகும். தமிழ் மொழியைச் செழுமிய முறையில் கற்கவும் சொல்லவும் பயன்படுவனவே, இணையற்றவாய் விளங்கும் தமிழ் இலக்கண நூல்கள் பலவும் ஆகும். தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பாகுபாடுகளை உடையது. அவற்றுள் அணி என்னும் அலங்கார நெறியை வகுத்துக் கூறுவது இத் தண்டியலங்காரம் ஆகும்.
வடமொழியில் அலங்கார நூல்கள் பல உள்ளன. அவற்றுள் காவியாதர்சம், சந்திராலோகம், குவலயானந்தம் என்பன தமிழிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. காவியாதர்சத்தைச் செய்தவர் மகாகவி தண்டியாசிரியர் ஆவர். இத்தண்டியலங் காரத்தைச் செய்தவர் பெயரும் தண்டி என்றே வழங்கப் பெற்று வருகின்றது. இவருடைய வரலாறு பற்றிப் பெரிதும் அறிதற்குரிய குறிப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை. பழங்காலத் தமிழ்ப் புலவர்களின் தன்னடக்கமே இதற்கும் காரணம் எனலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :