தண்டியலங்காரம்

ஆசிரியர்: டாக்டர் தமிழண்ணல்

Category கட்டுரைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தண்டியலங்காரம் தமிழ்நூல் அடிப்படை மரபும் வடமொழி மரபும் கலந்து, எழுதப்பெற்றுளது. இதில் வரும் வடமொழி அணிப் பெயர்கள் எளிதில் விளங்காதவை. மேலும் உள் வகைகளாக விவரிப்பன ஒருசில மட்டுமே சிறப்பாகப் புலப்படுபவை. பிற உள் வகைகளை ஒருமுறை படித்து, விடுதல் போதுமென்று சுருக்கமாகத் தரப்பெற்றுளது. மேலும் ஓரணி, பிற அணிகளோடு கலந்து வருவனவாகக் கூறியிருப்பனவும் அத்துணைப் பாகுபாடு அறியக் கூடியன அல்ல. இவை ஆய்வாளர்க்கு வேண்டுமேல் பயன்படலாம்.
எனவே இந்நூலில் தேவையுள்ளவை மிக விரிவாகவும் ஒரு முறைக்கு இருமுறையும் விளக்கப்பட்டுள்ளன. ஏனையவை சுருக்கமாக உரை நடையில் தரப்பட்டுள்ளன. எதனையும் விடவில்லை. புதிய முறையில் தமிழ்நூல் அணி இலக்கணம்படைக்கும் காலம் வரும். அதுவரை இந்நூல் பயன்படும்.
தண்டி தமிழ்நூல் கற்றவர் என்பதும் பழைய உரையாசிரியர் தமிழ்வல்லுநர், தமிழார்வலர் என்பதும் மகிழ்ச்சி தருவனவாகும். வடமொழி வல்லாண்மைக் காலத்தில் எழுதப்பட்டதால், காலத்திற்குக் கட்டுப்பட்டு எழுதப்பெற்ற நூல் இது. இந்நூலில் வரும் எடுத்துக்காட்டு வெண்பாக்கள் தனிச்சிறப்புடையவை. பாலிற் கலந்துள்ள நீரைப் பிரித்தறியவல்ல தமிழ் இலக்கியம் பயிலும் இளையோர், 'வந்தது கொண்டு வாராதன முடிப்பர்' என்ற நம்பிக்கை ஒளி தோன்றுகிறது. அதற்கு இந்நூல் வழிகாட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் தமிழண்ணல் :

கட்டுரைகள் :

மீனாட்சி புத்தக நிலையம் :