தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள்
ஆசிரியர்:
வாய்மைநாதன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1192-2719-7053-9528
{1192-2719-7053-9528 [{புத்தகம் பற்றி ஊர்ப்புற மக்களின் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் குறிப்பிட்ட வரையறைக்குட்படாதவை. மரம், கல், இரும்பு, புதர், புற்று, திசை முதலிய எல்லாவற்றிலும் அவர்களது தெய்வ நம்பிக்கை பரவியிருந்தது. அவர்கள் தம் முன்னோர் புகழை நினைவிற்கொண்டு வழிபட்டார்கள்; மாரியம்மன், பிடாரி, வீரன், சாம்பான் முதலான சிறு தெய்வங்களைக் கொண்டாடினார்கள்; அவர்களுக்கு அவ்வப்போது உவப்பான பொருள்களை அவற்றின் முன் படையலாய் வைத்தார்கள். உணவு, இறைச்சி, கள், சுருட்டு என்று அவை விதம் விதமாய் வேறுபடும். இவ்வழிபாடு வைதீக நெறியினால் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அந்த மக்கள் முதலில் மிரண்டனர்; காலப்போக்கில் அதனுடன் சேர்ந்துகொண்டார்கள்; மாதா, ஏசு, நாகூர் ஆண்டவர் ஆகிய பிற சமயக் கடவுளரையும் அதே பணிவு பக்தியுடன் வழிபட்டார்கள்; புத்தர், சமணர் சிலைகளையும் அவ்வாறே கொண்டாடினார்கள்; மாரி அம்மைக்கும், காளி வாந்தி பேதிக்கும் அதிகாரம் படைத்த தேவதைகள் என்று நம்பினார்கள்; மழையையும் தீயையும் இடி மின்னலையும் அவர்கள் தெய்வப் பெயர் கொடுத்து வழிபட்டார்கள்; நாகப் பாம்பையும் அது அடங்கும் புற்றையும் தொழுதார்கள். புற்றடி மாரியம்மன் குறைந்த காலத்தில் நிறைய அடியார்களை ஈர்த்த தேவதை. இவற்றை வணங்குவதில் அவர்கள் விருப்பு வெறுப்பற்ற சமரசம் காட்டினர்; இத்தெய்வங்கள் மீது பாடல்களை இசையோடு பாடினர்; சில இசைக் கருவிகளைப் பயன்படுத்தினர். உடுக்கை என்ற தோற் கருவி எளிதில் பூசாரிகள் கையில் ஓசை எழுப்பத் தொடங்கியது. இவர்கள் சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டார்கள்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866