தசா புத்தி பலன்கள் (கும்பம்)

ஆசிரியர்: மு மாதேஸ்வரன்

Category ஜோதிடம்
Publication விஜயா பதிப்பகம்
FormatHard Bound
Pages 621
ISBN81-8446-596-3
Weight900 grams
₹450.00 ₹382.50    You Save ₹67
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கும்ப லக்னத்துக்கு நண்பராகவே அமையும் கேதுவானவர் கும்பாதிபதியான சனியுடன் பரஸ்பர நட்பு நிலையுடன் உள்ளவர் என்பதால் தன் தசாவில் கும்ப லக்னத்துக்கு கெடுதல்களை செய்து விடமாட்டார். அதே சமயம் கேதுவானவர் கும்ப லக்ன சுபர்- யோகர் அல்ல வெறும் நண்பர்தான் என்பதால் யோக பலன்களையும் செய்து விடமாட்டார். ராகுவுக்காவது யோக ஸ்தானங்கள் ஐந்து உள்ளதால் அதில் உள்ளபோது அந்த ஸ்தான ஆதிபத்திய நிலையைப் பொறுத்து அவருக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் உள்ள பட்சத்தில் யோக பலன்களை அளித்து விட முடியும். கேதுவுக்கு அம்மாதிரியான யோக ஸ்தானங்கள் எதுவும் இல்லை. எனவே தன் தசாவில் அவர் கெடுதல்கள் இல்லை - கெடுதல்கள் குறைவு - கெடுதல்கள் உண்டு என்ற நிலைகளைத்தான் மேற்கொள்ள முடியும். கெடுதல்கள் இல்லை என்பது நல்ல நன்மையாகவும் கெடுதல்கள் குறைவாகவும் இருக்கும் என்பது ஓரளவு நன்மையாகவும் அமையும் அவ்வளவுதான் கேது தசா கும்ப லக்னத்துக்கு அளிக்கும் பலன்களாக அமையும். நல்ல அளவில் உள்ள கேதுவுடன் மகர லக்ன சுபர்- யோகர்களும் நல்ல நிலையில் இணையும் அளவில், பார்க்கும் அளவில் கேது தசாவில் நன்மைகள் ஏற்படக்கூடும். பொதுவில் கும்ப லக்னத்துக்கு கேது தசா கெடுதல்களைச் செய்து விடாது என்ற அளவில் லக்னம் முதல் 12 பாவங்களிலும் உள்ள போது தன் தசாவை எப்படி செயல்படுத்துவார் என்று சார- நவாம்ச பல அடிப்படையில் அலசிப் பார்க்கலாம். முதலில் 1-ம் இடமான கும்ப லக்னத்தில் உள்ள கேது தன் தசாவை எப்படி செயல் படுத்துவார் என்று கவனிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு மாதேஸ்வரன் :

ஜோதிடம் :

விஜயா பதிப்பகம் :