டுர்டுரா
ஆசிரியர்:
வா.மு. கோமு
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE?id=1133-0203-4116-9796
{1133-0203-4116-9796 [{புத்தகம் பற்றி சிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும்.இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது.கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால,த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல இது.தெளா என்றதொரு தேசத்தின் சாபத்தைப் போக்குவதற்கான பெட்டகத்தைத் தேடி சிறுவர்களின் சாகசப்பயணத்தை விறுவிறுப்[புடன் கொடுத்திருக்கும் விதத்தில் நவீன யுகச்சிறுவர்கள் மத்தியிலும் கொண்டாடப்படுவார் வா.மு.கோமு.சிறுவர் இலக்கியமும் கை கூடி வருமா?என்கிற பரிட்சித்துப் பார்த்தலின் வெற்றியே இந்நாவல். } {பதிப்புரை தெளா தேசம் விடியலுக்கான ஆயத்தத்தில் இருந்தது. தேசம் என்று சொல்வதை விட, ஒரு பெரிய தீவு என்று தெளாவைச் சொல்லலாம். இந்தத் தீவை கண்டு பிடித்த எட்வின் ரொனால்ட் ஒரு போர்ச்சிக்கீசிய நாட்டவர். கடல்பயணத்தில் ஆர்வமுடன் இருந்த அவர் இந்த தீவுக்குள் இறங்குவதற்கு பெரிய ஆர்வம் எதுவும் சிறப்பாக இருந்திருக்கவில்லை . கப்பல் பிரயாணிகளுக்கு வழக்கமாக நடக்கும் கிரகக் கோளாறு காரணமாக பனிப்பாறையில் கப்பலின்' பின் மூக்கு இடித்து கடல் நீர் கப்பலுக்குள் ஏற கப்பலில் பிரயாணம் செய்த ஐம்பது சொச்ச பிரயாணிகளில் பத்து இருபது சொச்ச பிரயாணிகளுக்கு அடிவயிறு கலங்கி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. பெரிய உடைப்பென்றால் தண்ணீர் சள சளவென கப்பலுக்குள் நுழைந்து கசமுசவென சந்து கிடைக்கும் பக்கமெல்லாம் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்து கொஞ்சம் சீக்கிரமே கடலுக்கு அடியில் வெகு சீக்கிரமாக அழுத்தியிருக்கும். நொண்டிக்குதிரை சறுக்கினதுதான் தனக்கு சாக்கு என்று கிடையில் படுத்துக் கொள்ளும். அது ஒரு தமிழ்நாட்டு பழமொழி. கிண்டி என்ற ஊரில் குதிரைகளை ஓட விட்டு அவற்றின் மீது பைசா கட்டி விளையாடும் விளையாட்டு என்கிறார்கள். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866