டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள்

ஆசிரியர்: ஏ. நஸ்புள்ளாஹ்

Category கவிதைகள்
Publication வாசக சாலை
FormatPaperback
Pages 126
Weight100 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு பிரதியாளனை பின்தொடரக் காரணியாக வாசகனைத் துழாவி புதிய வெளிக்கு அழைத்துப் போவது பிரதியாளனின் எல்லாப் பிரதிகளுமல்ல, அதற்கு அந்தப் பிரதியாளனின் ஒரு பிரதி வடிவம் போதுமானது. இந்தப் பிரதிகளிலும் பேசா மொழியையும் பேசாப் பொருளையும் வாசகனுக்கு தருவதனூடாக தனித்துவமான கவிதை வெளியை வாசகன் கண்டுகொள்வான் என்பது எனது நம்பிக்கை. அதற்காகவே இந்தப் பிரதி முழுக்க கனவு மொழியையும், மாய மொழியையும் கையில் எடுத்து இயற்கையின் மீதமர்ந்தும், கனவின் மீதமர்ந்தும் சொற்கூட்டங்களுடன் பயணப்படுகின்றேன்.
கவிதையின் உணர்வு, அதன் கிளர்ப்பு இன்னும் வாசகனது மனதின் அடியில் மண்டிக் கிடக்கும் வாசிப்பின் தீராத் தாகம் இவைகளுக்கு ரசிப்பூட்டும் வேலையை பிரதியாளன் செய்ய வேண்டும். இந்த உளவியல் முயற்சியை இந்தப் பிரதிகள் சிறிதளவேனும் வாசகனுக்குக் கொடுக்கும் என்கின்ற பெரும் நம்பிக்கையுடன் வெவ்வேறாக நதியாகி காற்றாகி இறகாகி இலையாகி எல்லாமுமாக வாசகனிடம் வருகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

வாசக சாலை :