டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
₹50.00 ₹47.50 (5% OFF)

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இராமேசுவரத்தில் ஒரு சிறிய பள்ளியில்தான் அப்துல்கலாம் அவர்களின் ஆரம்பக் கல்வி தொடங்கியது. கலாமின் தந்தையார் ஒரு இஸ்லாமியராக இருந்த போதிலும் அவருக்கு இந்து மக்களோடும் நெருங்கிய நட்பு இருந்தது என்று கண்டோம். அதுபோலவே கலாமும் இந்துக்களுடன் எவ்வித மதபாகுபாடுமின்றி பழகி வந்தார்.
கலாமின் சிறுவயதில் பட்சி இலட்சுமண சாஸ்திரிகளின் மகனான பட்சி இராமநாத சாஸ்திரியுடன் கலாம் கொண்டிருந்த சிறந்த நட்பே அதற்கு உதாரணமாகும். ஆரம்பப் பள்ளியில் கலாமும், இராமநாத சாஸ்திரியும் ஒரே பெஞ்சில் அருகருகில் அமர்வார்கள். ஒருநாள், அந்த வகுப்பிற்கு வந்த ஆசிரியர் ஒருவர், கலாமும், பட்சி இராமநாதனும் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டார். ஆசிரியருக்கு ஆத்திரம் வந்தது. அதற்குக் காரணம், அந்த ஆசிரியருக்கு மதப்பற்று அதிகம் இருந்தது. ஜாதி மத வேறுபாடு பரவலாக நிலவி வந்த சூழ்நிலை அது. எனவே அந்த ஆசிரியர், கலாமை முன் பெஞ்சிலிருந்து எழுப்பி கடைசிப் பெஞ்சுக்குப் போகுமாறு கூறிவிட்டார். அப்துல்கலாம் ஆசிரியர் கூறியதுபோலவே கடைசி பெஞ்சுக்குச் சென்று அமர்ந்துவிட்டார்...

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :