ஞான யோகம்

ஆசிரியர்: சுவாமி விவேகானந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 391
ISBN978-81-7120-737-5
Weight300 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுவாமி விவேகானந்தர் உலகிற்கு அளித்த கொடைகளுள் முக்கியமான ஒன்று 'நான்கு யோகங்கள்' ஆகும். அவை கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், ஞான யோகம். அவரை ஒரு சாதாரண மகானிலிருந்து வேறுபடுத்தி, யுக ஆச்சாரியராகக் காட்டுகின்ற பண்புகளுள் இதுவும் ஒன்று. மன இயல் ரீதியாகப் பார்த்தோமானால், பொதுவாக மக்களை இந்த நான்கு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். யாருடைய மனப்பாங்கு எந்த ரீதியாக உள்ளதோ அந்தப் பாதையை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த நூலில் சுவாமிஜி நமக்குக் காட்டுவது அறிவுப் பாதை, ஞானயோகம். அவரது கருத்துப்படி, இதுதான் யோகங்களுள் மிகவும் அறிவுபூர்வமானது, தத்துவ பரமானது, ஆனால் மிகவும் கடினமானது. எனவே ஞானயோகத்தின் சிறப்பை, அதன் தேவையை, அதன் படிகளை, அது அள்ளித் தரும் அனுபவங்களை, அதன் செயல்முறைப் பகுதியை விளக்குகின்ற அதேவேளையில், பாதையில் வரும் தடைகளையும் மனமயக்கங்களையும் எடுத்துக்கூறி நம்மை எச்சரிக்கவும் செய்கிறார் அவர். ஞானயோகத்தின் திரட்சியை இதைவிட எளிதாகத் தர முடியுமா என்பது சந்தேகமே...

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விவேகானந்தர் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :