ஞானியர் கதைகள்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 150
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநாம் நீரை எப்படிப் பயன்படுத்துவது, நெருப்பை எப்படிப் பயன்படுத்துவது என்று முன்னோர்களிடமிருந்து, முந்தைய தலைமுறையினிடமிருந்து கற்றுக்கொண்டோமோ அதேபோல உள்ளுக்குள் நம்மைத் தேடுவதையும் இம்மாதிரி முன்னோர்களிடம், முன்னோர்களில் சிறந்தவர்களான ஞானிகளிடம் தேடி கற்றுக் கொண்டோம். மனித குலம் இந்தத் தேடலை நிறுத்தவேயில்லை. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
வெளியுலகம் எளிமையாக இருந்தது. மனிதனின் உள்ளுலகம் சிக்கலாகப் போயிற்று. உள்மனச் சிக்கலை அவிழ்த்து மனிதனைத் தெளிவாக்கி வளமாக்குவதற்கு மதங்களும், இறை நம்பிக்கையும் உதவுகின்றன. இந்த இறை நம்பிக்கையை வளர்த்து தத்துவச் செறிவை எட்டக்கூடிய வாழ்க்கையைத்தான் ஞானியர்கள் வாழ்ந்தார்கள். அந்த ஞானியரின் வாழ்வும், வாக்கும் பற்றி தொடர்ந்து பக்தியில் ஞானியர் கதைகள் என்கிற தலைப்பில் எழுதப்போகிறேன்.
என் குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமார் அருளால் அவரை வணங்கி அவரிலிருந்து துவங்கி மீரா, கபீர்தாஸர், கோரக்கர், முத்துசாமி தீட்சிதர், ஞானானந்த சுவாமிகள் என்று ஞானியரின் கருணையும் என் எழுத்தைக் காக்கும். உங்களை தெளிவாக்கும். கற்பது எளிதாகும்.
தலைமுறை தலைமுறையாக மனிதர் குலம் இம்மாதிரி ஞானியர் கதைகளை தலையில் தூக்கிக்கொண்டு போய் அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது வழக்கம். இதுதான் நடைமுறை. இது என் முறை.
என்றென்றும் அன்புடன்
பாலகுமாரன்

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :