ஞானமாலிகா

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கட்டுரைகள்
FormatPaper back
Pages 168
ISBN978-81-8402-635-1
Weight150 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காலக் கடலில் நீண்டதூரம் பயணம் செய்தபிறகு திரும்பிப் பார்க்கிறேன். கரை மங்கலாகக் கண்ணுக்குத் தெரிகிறது. அதோ அந்தக் கரையிலே.... என் காதலி! சிருஷ்டியின் ஓர் அபூர்வமான பொருள். ஒன்றிரண்டு சிப்பிகளில் மட்டுமே காணக்கூடிய முத்து. எல்லாருமே ஒரேமாதிரி விலை மதிக்கக்கூடிய ரத்தினம். என் காதலி.... உணர்வுகளுக்குப் பருவம் வரும் முன்பே, எங்கள் நினைவுகளுக்குப் பருவம் வந்துவிட்டது. இவ்வளவு நீண்ட பயணத்துக்குப் பிறகும் அந்த முத்திரைகள் அப்படியே என் நெஞ்சிலிருக்கின்றன. நாணம் தெரிய முடியாத பருவத்தில் அவள் நாணினாள். நாலும் பழகத் தெரியாத பருவத்தில் நான் அதை ரசித்தேன். நிர்மலமான ஆகாயத்தைப் போன்று தெளிவான முகம்; சலனமில்லாத பார்வை; கூரிய அந்தச் சிறுவிழியில் சிறு குறிப்பு; அது தேவதையின் கடாக்ஷம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கட்டுரைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :