ஜோதிட பாடம் பாகம் - 3

ஆசிரியர்: புலியூர் பாலு

Category ஜோதிடம்
Pages 176
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் கோள்களுக்கும் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கும் ஏற்படும் தொடர்பு எத்தகையது என விளக்குவது ஜோதிட சாஸ்திரமாகும்.
முற்கால முனிவர்கள் உலக நன்மையைக் கருதி, முன்கூட்டியே சில நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றிற்கு தகுந்தாற்போல் இயங்க வேண்டும் என்ற காரணத்தால், கோள்களால் ஏற்படும் பலன்களை அறிய முற்பட்டார்கள். அத்தகைய முனிவர்கள் பதினெட்டு பேர்களாகும். பதினெட்டு பேர்களும் இந்தியாவிலேயே தோன்றியவர்கள் அல்ல. வேறு நாட்டில் தோன்றிய முனிவர்களும் இருந்திருக்கிறார்கள்.
ஜோதிடத்திற்கு ஆதாரமாக வான சாஸ்திரம் பயன்பட்டது. அந்த வான சாஸ்திரமும் விஞ்ஞான அடிப்படையானதுதான். மகான்கள், வானசாஸ்திரத்தை சித்தாந்தம் என்றும், ஜோதிடத்தை கணிதம் என்றும் இரண்டு வகையாகப் பிரித்து கையாண்டு வந்தனர். அவர்களுக்குப் பின்னால் பல ஆயிரம் ஆண்டுகள் இந்தக் கலையை வளர்க்க யாருமே முயற்சித்ததாகத் தெரியவில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் பாலு :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :