ஜெயகாந்தன் கதைகள்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category கதைகள்
Publication விகடன் பிரசுரம்
FormatHard Bound
Pages 370
ISBN978-81-8476-590-8
Weight600 grams
₹490.00 ₹441.00    You Save ₹49
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1960, 70-களில் நான் எழுதிய குறுநாவல்கள், சிறுகதைகள், பேட்டிக் கட்டுரைகள் ஆகியவற்றில் சில படைப்புகளை அப்படியே - பிறந்தமேனிக்கு, அழிவோ, மாற்றமோ இல்லாமல் - வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற முயற்சியில் டாக்டர் ராம் - திருமதி வனிதாவின் கை வண்ணத்தில் வெளிவரும் தொகுப்பு இது. ஓவியர்கள் கோபுலு, மாயா ஆகியோர் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி இருக்கிறார்கள் என்பதைவிட உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்பதே பொருத்தம். இதிலுள்ள நயங்களை நான் திரும்பவும் எடுத்துச் சொல்லப்போவதில்லை. இவற்றை எழுதியவனையும் வாசகர்களையும் இவற்றை எழுதிய காலத்துக்கே அழைத்துச் செல்வது இதன் சிறப்பு அம்சம்! தமிழுக்கு இந்த முயற்சி புதுமையானது. எழுத்துச் சீர்திருத்தம், வடிவ அமைப்பு இவை எல்லாம் இந்த எழுத்துகள் வெளிவந்த காலத்தில் இல்லை. அதேபோல் வடிவமைப்பிலும் எழுத்துச் சீர்திருத்தத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதில் நேராமல் இருப்பது இந்த ஆக்கத்தின் நேர்மையைக் காட்டுகிறது. இந்த முயற்சி எனது பழைய வாசகர்களை அந்தந்தக் காலத்துக்கு கொண்டு போய் நிறுத்தி, அவர்களோடு பழைய உறவைப் புதுப்பித்துக்கொள்ள முயல்கிறது. அந்த முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

கதைகள் :

விகடன் பிரசுரம் :