ஜானகி எம்.ஜி.ஆர் - நாடாண்ட முதல் நாயகி

ஆசிரியர்: வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்

Category வாழ்க்கை வரலாறு
Publication இனியன் பதிப்பகம்
FormatPaperback
Pages 240
Weight300 grams
₹250.00 ₹235.00    You Save ₹15
(6% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர், 1987ம் ஆண்டு மறைந்தபிறகு, தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஆனார் ஜானகியம்மாள்.சிறிது காலத்திலேயே அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர், தன் இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆரின் கொள்கைகளைப் பின்பற்றுவதிலும், அதைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான இல்லத்தைக் கவனித்து வந்த தோட்டத்தம்மா, 1996ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆர். வறுமையில் இருந்தவர்களுக்கு வாரி வழங்கினார் என்றால், தோட்டத்தம்மாவோ பசியோடு வந்தவர்களுக்கு வயிறார உணவளித்தார்.
அவர் வாழும் காலம் வரை ராமாபுரம் இல்லத்தின் கதவுகள், பசித்த மக்களுக்காகத் திறந்தே இருந்தன. இங்கிருந்த சமையலறை, ஓய்வின்றி இயங்கிக்கொண்டே இருந்தது. கும்பகோணத்தில் தொடங்கிய ஜானகி அம்மையாரின் பயணம், கோட்டை வரை சிறப்பாகச் சென்றடைந்ததே பெருமைக்குரிய ஒன்றுதான். உயிர் பிரிந்த கடைசித் தருணத்திலும் அவருடன் இருந்தது, எனது பெரும்பாக்கியம். “கல்வியும், கலையும் நமக்கு மிகப்பெரிய சொத்து. அதை நம்மிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. கலையும், தொழிற்கல்வியும் கற்றுக்கொண்டால், இந்த உலகின் எந்த மூலையிலும் வாழ்ந்துவிடலாம்” என்று என்னிடம் அடிக்கடி சொல்வார், தோட்டத்தம்மா. அது அனுபவப்பூர்வமான உண்மை என்பது இப்போது புரிகிறது. அவரது புகழையும் அவர் ஆற்றிய பணிகளையும் அடுத்த தலைமுறை தெரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நூலை உருவாக்கி அளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன் :

வாழ்க்கை வரலாறு :