ஜாதக அலங்கார சாரம்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category ஜோதிடம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 216
Weight200 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் நாட்டிலுள்ள மிகப் பெரும்பாலோராலும் விரும்பிக் கற்கப் பெறுவதும், ஆதாரமாகக் கொள்ளப் பெறுவதும், 'ஜாதக அலங்காரம்' என்னும் சோதிட நூல் ஆகும். இந்நூலைச் செய்தவர், இன்றைக்கு 350 ஆண்டு களுக்கு முன்னர், கீரனுாரில் வாழ்ந்து வந்த நடராசன் என்னும் பெரியார் ஆவார். இந்த நூல் இயற்றிய காலத்தை சாலிவாகன சகம் 1587 ஆம் ஆண்டு விசுவாசி வருடம் என்று அவரே குறிப்பிட்டிருக்கின்றார்.
இவர் வடமொழியிலும், தமிழிலும், சோதிட சாத்திரங்களில் மிகுந்த புலமையுடையவர்; இவருடைய குருநாதர் ஞானப்பிரகாச முனிவர் ஆவார்.இந்நூலை உருவாக்கும் முயற்சியில், இவருக்கு ' உதவியாக வடமொழியிலுள்ள சோதிட நூல்களின் கருத்துக்களைச் சொல்லி உதவியவர்கள், திட்டைக் குடியைச் சேர்ந்த திருமலை அய்யங்காரும், அவர் சகோதரரான நாராயண அய்யங்காரும், கீழ்முத்தூரைச் சேர்ந்த நாராயண அய்யரும் ஆவார்கள். புகழ் பெற்ற இச் ஜாதக அலங்காரத்தில் கூறப் பெற்றுள்ள சோதிட உண்மைகளைத் திரட்டிச் 'ஜாதக அலங்கார சாரம்' என்னும் பெயரில் உரைநடையில் அமைந்து வெளிவருவது இந்நூல் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :