ஜம்பு மகரிஷி வாக்கியம்

ஆசிரியர்: க.கோபிகிருஷ்ணன்

Category ஜோதிடம்
Publication குமரன் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 440
Weight450 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




ஜம்பு மகரிஷி வாக்கியம்
(ஜோதிட சாஸ்திர நூல்) எட்டயபுரம் க . கோபிகிருஷ்ணன் விருத்தியுரை எழுதியுள்ள இந்நூலில் விண்வெளிக் குடும்பம் பற்றிய விரிவான செய்திகள், நவக்கிரகங்களின் மகத்துவங்கள், ஒரு ஜாதகத்தின் பன்னிரெண்டு ஸ்தானங்களில் கிரகங்கள் உண்டாக்குகின்ற பலாபலன்கள், பீஜபலம். ஷேத்ரபலம் அறியும் விதம், தர்ம சாஸ்திரங்கள், தான தர்மத்தின் வலிமை, முன்ஜென்ம வினைகளால் அமையும் வாழ்க்கை முறை, மாந்தர் தம் வாழ்வில் என்னென்ன குற்றங்களைச் செய்கின்றார்கள்; அவற்றின் விளைவுகள் யாவை? என்னென்ன நன்மைகள் செய்தால் எவ்வாறு எப்படி பலன்கள் உண்டாகும் என்பவைகள் பல உதாரணங்களுடன் தெளிவுறுத்தப் பட்டுள்ளது.இதில் கூறப்பட்டுள்ள கோயில் கட்டட அமைப்பு - முறைகள், பிரகாரம் அமைக்கும் விதம், சந்நிதிகளின் அமைப்பு, கோயில் தூண்களின் வடிவமைப்பு, கோபுர வடிவமைப்பு, சிற்ப வடிவமைப்பு, வாஸ்து சாஸ்திரம், புஷ்ப சாஸ்திரம் முதலியவை அருமையான அம்சங்களாகும். - வாக்கு தோன்றும் விதம், வாக்கின் வகைகள், அஷ்டமா சித்திகள், ஆகாச அந்தர சக்கர யோகம், ஜால வித்தை, காமக்கலையைப் பயில ஸ்ரீ ஆதிசங்கரர் பரகாய பிரவேசம் செய்த நிகழ்ச்சி, சர்ப்ப சாந்தி, சர்ப்ப வகைகள், நவக்கிரக யந்திரங்கள், ஸ்தோத்ரங்கள், சிறு சிறு கதைகள் எனப் பாமரருக்கும் பயன்படக்கூடிய பற்பல செய்திகளும் இதில் உண்டு. ஒவ்வொருவரின் கொட்டி னை விளக்கக் கூடிய கருவிநூல் இது.
.


உங்கள் கருத்துக்களை பகிர :
க.கோபிகிருஷ்ணன் :

ஜோதிடம் :

குமரன் பதிப்பகம் :