சோஷலிசம்

ஆசிரியர்: இர்ஃபான் ஹபீப்

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 302
Weight350 grams
₹250.00 ₹187.50    You Save ₹62
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முதலாளித்துவம் குறித்து ஒரு ஆழமான திறனாய்வை கார்ல் மார்க்ஸ் வழங்கியுள்ளார். புரட்சியினைப் பற்றியும் முதலாளித்துவத்தை அகற்றிவிட்டு அதன் இடத்தில் சோஷலிசத்தை நிறுவுவது குறித்தும் தனது பார்வையை அவர் முன் வைத்துள்ளார். சோஷலிசம் குறித்து அவரும், அவரது நெருங்கிய தோழரான பிரெடரிக் எங்கல்சும் அடிப்படையான கருத்துக்களை மட்டுமே சுருக்கமாக அளித்துள்ளனர், 1917-ம் ஆண்டின் அக்டோபர் புரட்சியின் தலைவரான வி.ஐ.லெனினும் கூட , சோஷலிசக் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியைத்தான் குறிப்பாக சோஷலிச , ஒழுங்கமைவின் நிர்மாணத்தில் அரசு மற்றும் விவசாய வர்க்கத்தினரின் இடம் குறித்து மட்டுமே தனது பார்வையை வெளிப்படுத்த முடிந்தது. சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்கள் சோஷலிசத்தின் பக்கம் திரும்பினர். சோவியத் யூனியன் மற்றும் சீனாவில் சோஷலிசத்தைநிர்மானிக்கும் பணிக்கு முறையே ஜே.வி.ஸ்டாலினும் மாசேதுங்கும் , தலைமை தாங்கினர். நிஜ உலகில் சோஷலிச சமுதாயத்தை மெய்யாக ' வடிவமைப்பதில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர். அந்த நிஜ உலகில் மனித குலத்தின் மூன்றில் ஒரு பங்கு பகுதியை , உள்ளடக்கிய உலகின் மிக மிகப் பின்தங்கிய பகுதிகளில் வாழ்ந்த தொழிலாளர்கள். விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு விடுதலை, நிலம், வாழ்க்கை மற்றும் கல்வியை சோஷலிசம் வழங்கியது. மார்க்சிய மரபு வழி வந்துள்ள முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூலானது சோஷலிசம், லட்சியம் மற்றும் அது விடுக்கும் சமூக விடுதலைச் செய்தியை மற்றும் அது எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்த ஒரு எளிய அறிமுகத்தையும் உள்ளடக்கியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :