சோழர் வரலாறு

ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 324
Weight400 grams
₹200.00 ₹150.00    You Save ₹50
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ்நாட்டில் வியத்தகு முறையில் கற் கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது. கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன்கோயில் முதலியவற்றைக் கண்ணுற்ற பிற்காலச் சோழர் வானளாவிய விமானங் கொண்ட கோவில்களைக் கட்டினர். இக்கற்கோவில், சுவர்களிலும் தூண்களிலும் தரையிலும் ஏராளமான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. கல்வெட்டுள்ள கோவில்கள் புதுப்பிக்கப்படுங்கால், அக்கல்வெட்டுகளைப் பிரதிசெய்து கொண்டு, புதிதாக அமைத்த கோவிலில் பொறித்தல் அக்கால மரபாக இருந்தது. சுதை, செங்கல் முதலியவற்றால் ஆகிய கோவில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. கோவில்களில் உள்ள பலவகைச் சிற்பங்களைக் கொண்டு சோழர் சிற்பக்கலை உணர்வை அறியலாம்; ஒவியங்களைக் கொண்டு சோழர்கால ஓவியக்கலை வளர்ச்சியை அறியலாம்; மக்களுடைய நடை, உடை, பாவனை, அணிகள் முதலியன அறியலாம். கோவில் கட்டட அமைப்பைக் கூர்ந்து நோக்கியப் பல்லவர் காலக் கட்டடக்கலை சோழர் காலத்தில் எங்ஙனம் தொடர்புற்று வளர்ந்து வந்தது என்பதை உணரலாம்.

இலக்கியம், சமயம், வரலாறு, கோயில்கலைகள், கல்வெட்டு இவற்றில் ஆழ்ந்த புலமையுடையவர். ஆய்வு நெறிமுறையிலும், அணுகுமுறைகளிலும் புதிய சிந்தனைகளை விதைத்தவர். சாதி, சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கத் தம் எழுத்தாலும் பேச்சாலும் பாடு பட்டவர். மாந்த நேயமும், மொழி, நாடு இவற்றின்பால் தளராப் பற்றும் கொண்டு உழைத்து உயருமாறு இளைய தலைமுறையை ஆற்றுப்படுத்தியவர். இவருடைய 'பல்லவர் வரலாறு', 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி', 'தமிழ் மொழி இலக்கிய வரலாறு', 'பெரியபுராண ஆராய்ச்சி', "சைவ சமய வளர்ச்சி முதலிய நூல்கள் காலம் கடந்து நிற்கும் தகைமையன. எளிமையும் இனிமையும் உண்மையும் உழைப்புமே இவரது அடையாளங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.சுப.மாணிக்கனார் :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :