சோழர் சரித்திரம்

ஆசிரியர்: நா. மு. வேங்கடசாமி நாடார்

Category வரலாறு
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்டின் சரித்திரம் தொன்று தொட்டு அதனை ஆண்டுவந்த சேர சோழ பாண்டிய வேந்தர்கள், இடைக் காலத்தே ஆட்சி புரிந்த பல்லவர்கள் என்போரின் வரலாறுகளில் பெரும்பாலும் அடங்கியிருக்கிறது. சரித்திர நோக்கில் ஏனை மன்னர்களின் வரலாற்றினும் சோழர் வரலாறு விரிவுடையதாகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதிப் பயிலப்பெற்று வருகின்ற இந்திய தேச சரித்திரப் புத்தகங்களில் தமிழ் நாட்டின் வரலாறு எங்கோ ஒரு மூலையில் சிறிதளவாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டின் வரலாற்றினை அறிந்கொள்ளுதற்குரிய சாதனங் களும் சில பெரியார்களின் அரிய முயற்சியால் முப்பது நாற்பது ஆண்டுகளாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் நாட்டின் பழைய வரலாறு, நாகரிகம், முதலியவற்றைத் தாய்மொழி வாயிலாக நம் இளைஞர்கட்கு நன்கு கற்பிக்க வேண்டுமென்னும் உணர்ச்சி இக்காலத்தில் இந்நாட்டுப் பெரியார் பலரிடை உண்டாகி யிருப்பது வெளிப்படை இந்நிலையில்,
" குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தான் புரண்டிட் டோடித் தரங்கநீர் அடைக்க லுற்ற"
அணில் போன்று, யானும், சோழர் சரித்திரத்தினை எழுதலாயினேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா. மு. வேங்கடசாமி நாடார் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :