சோழர் காலச் செப்பேடுகள்

ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப

Category வரலாறு
Publication அகநி வெளியீடு
FormatHardBound
Pages 352
ISBN978-81-921785-3-0
Weight550 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வரலாறு என்பது வெறும் பாடம் மட்டுமல்ல. அது நம் முன்னோர்களின் கதைதான். நமக்கு முன்னால் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதையைவரலாற்றை அறிந்திருத்தல் அவசியம்.முன்னடிப் பற்றி, பின்னடி தொடர்வதில் பயணம் எளிதாகுமென்பது நாம் அறியாததல்ல. ஆனால் நம்முடைய முந்தைய வரலாற்றை அறிந்துக் கொள்வது தமிழ் வாசகர்களுக்கு எளிதல்ல.
உலகின் மிகப் பெரிய பேரரசாக மூன்று நூற்றாண்டுகளுக்கு (9-12) கோலோச்சியது சோழப் பேரரசு. உலகின் வலிமையான கப்பற்படையைக் கொண்டு கடல் கடந்து நாடுகளைக் கைப்பற்றி தமிழனின் பெருமையை கிழக்காசிய நாடுகளுக்குக் கொண்டு சென்றவர்கள் சோழர்கள். சோழர்களின் முறையான வரலாற்றைக் கூட தமிழ் வாசகன் அறிந்துக் கொள்வது கடினமே. அக்குறையை சோழர் காலச் செப்பேடுகள் நூல் தீர்த்து வைக்கிறது.
இந்நூலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வரலாற்றின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் மாவட்டத்தில் இருந்த 1200 க்கும் மேற்பட்ட கோயில் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியை தொல்லியல் துறையுடன் இணைந்து செய்தார். இப் பணியின் தொடர்ச்சியாக சோழர் செப்பேடுகளை தொகுத்து நூலாக எழுத ஆர்வம் கொண்டார். சோழர் கால வரலாறு, ஆட்சியியல் அமைப்பு, நில தானம், கோயில் நிவந்தங்கள் வழங்குதல், அக்கால மக்கள் வாழ்க்கை , மன்னர்களின் சிறப்பம்சங்கள் ஆகியவைப் பற்றிய ஒப்பாய்வியல் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை நம் கண்முன் கொண்டு வருகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப :

வரலாறு :

அகநி வெளியீடு :