சொல் (சொல்லாய்வு நூல்) பகுதி-1

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 276
First EditionJan 2011
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஓரினத்தின் வரலாறு என்பது நாகரிகம், பண்பாடு, சமயம் போன்ற பல்வேறு கூறுகளால் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் அவ்வினம் பேசிவந்த மொழியும் அவர்களது வரலாற்றைத் தெளிவுபடுத்தும். மொழியும், மொழியை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய இலக்கண வளங்களும், அவ்வினத்தின் காலக்கண்ணாடிகளாகும். மொழியைக் கொண்டே ஓரினத்தின் வரலாற்றுப் பெருமைகள் உறுதி செய்யப்படும். நாகரிகப் பண்பாட்டு வளாச்சியென்பது, மொழிவளர்ச்சியோடு தொடர்புடையது. வரலாறும் மொழியும் இரட்டைக் குழவிகள் என்று கூறுவர். மொழித் திறமையும் வரலாற்று அறிவும் பெற்றவர்களே ஆய்வுகளை மேற்கொள்ள இயலும். வரலாற்று நிகழ்வுகளை, மொழியே பதிவு செய்கின்றது. தொன்மையான வரலாறும், வளமான தமிழ் மொழியும் தமிழினத்தின் இருபெரும் செல்வங்களாகும்.
தமிழ்மொழியின் பெருமைகளும் சிறப்புகளும் கடந்த காலங்களில், தமிழர்களாலேயே உணரப்படவில்லை. முதன் மொழியும் மூத்த மொழியுமான தமிழ்மொழி, உலகமொழிகளைக் காட்டிலும் வளமையானது என்ற சிந்தனை கூட தமிழரிடத்தில் காணப்படவில்லை . இடையில் புகுந்த ஆரியம், தமிழர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளிப் போட்டது. சமற்கிருதமே உயர்ந்த மொழி, கடவுள் மொழி, வேதமொழி என்று தமிழர்களே ஏற்க முன்வந்தனர். தமிழும் சமற்கிருதமும் நமதிரு கண்கள் என்றுகூடச் சிலர் பெருமைபட்டுக் கொண் டனர். தமிழின் பெருமைகளைத் தமிழர்களுக்கு எடுத்துக்கூற, மேலை நாட்டார் வரும் வரையில் தமிழர்கள் காத்திருந்தனர் போலும்.


உங்கள் கருத்துக்களை பகிர :