சொல்லத் தோணுது

ஆசிரியர்: தங்கர் பச்சான்

Category சமூகம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 240
ISBN978-93-84179-70-3
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் எப்படியெல்லாம் மூலை முடுக்கில் கிடந்த குப்பை, கசடு, கழிவுகளையெல்லாம், சாக்கடை ஆறுகளோடு சேர்த்துக்கொண்டு போய் கடலில் தள்ளியதோ அதே போல் தற்போதுள்ள அரசியல் கழிவுகளையும் அடித்துக் கொண்டு போய்ச் சேர்க்கும் நாளுக்காக மக்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்குறிப்பாக இளைஞர்கள் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும் போதெல்லாம் நம் மக்களைப்பற்றித்தான் நினைத்துக்கொள்வேன். பயணம் எனச் சென்றால் கையில் புத்தகம் இல்லாமல் பயணிக்கும் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பது அரிதுதான். அதே போல் நினைவுப்பரிசோ, திருமண நாளோ, பிறந்த நாளோ என எதுவானாலும் புத்தகங்களையே பெரும்பாலும் பரிசாக அவர்கள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். படிப்பது என்றால் அது வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே என நினைத்து வாழும் இம்மக்கள் எழுத்தாளர்கள் என்றால் யார் என்பதையும், அவர்கள் எதற்காக யாருக்காக எழுதுகிறார்கள் என்பதையும் இன்னும் உணரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங் களுக்கென்று ஓர் இடம், படிப்பதற்கென ஒரு இடம் என என்றைக்குத் தமிழர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்கிறார்களோ அது வரை நம் மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைக்கப் போவதில்லை .
எனது வாழ்நாளில் ஓர் ஆண்டு காலத்தை எடுத்துக்கொண்ட இந்நூல் உருவாகக் காரணமாக இருந்த 'தி இந்து' நாளேட்டுக்கும் அயர்ச்சியடைந்த என்னை அவ்வப்போது தட்டிக்கொடுத்து சரி செய்த நாளேட்டின் ஆசிரியர் திரு. அசோகன் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கர் பச்சான் :

சமூகம் :

கிழக்கு பதிப்பகம் :