சொல்முகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category கட்டுரைகள்
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 224
Weight300 grams
₹170.00 ₹161.50    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை.

எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்--கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.

இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

கட்டுரைகள் :

நற்றிணை பதிப்பகம் :