சைவ சமய விலக்கு

ஆசிரியர்: ந.சுப்பு ரெட்டியார்

Category ஆய்வு நூல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 320
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இறைவனது சொரூப இலக்கணத்தை உபநிடதங்கள், சத்து'; ‘சித்து'; 'ஆனந்தம்' என்று மூன்று தன்மைகளாகக் கூறும். இம்மூன்று சொற்களும் ஒன்றாகச் சேரும் பொழுது ‘சச்சிதானந்தம்' என்றாகின்றது. இதனால்தான். இறைவன் 'சச்சிதானந்தம்' என்று வழங்கப்பெறுகின்றான். உயிரின் இயல்புபற்றிச் சைவ சித்தாந்தம் கூறும் கருத்துகளை இந்நூல் ஒருமைபடுத்தித் தருகின்றது. உயிர்பற்றி மெய்கண்டார் தரும் விளக்கமும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. உயிர் எல்லையற்று நிற்கும் வியாபகப்பொருளேயாயினும், இறைவனது வியாபகத்தில் அடங்கி நிற்பதாகும் என்பது சைவ சித்தாந்தத்தின் கருத்து. இதனையும் தெளிவாக ஆசிரியர் விளக்குகின்றார்.
சைவ சமயத்தைப்பற்றி இளைஞர்கள் கற்றரிய எளிய முறையில் இந்நூலை இயற்றியிருக்கிறார் ஆசிரியர். ஆன்மிகத்தில் அனுபவமும் பற்றும் உள்ள ஒரு வயோதிகர் ஓர் இளைஞனுக்கு சைவ சமயத்தைக் கடிதம்மூலம் விளக்குவது போல, இந்நூலை ஆசிரியர் படைத்துள்ளார். இம்முயற்சி பாராட்டுதற்குரியது. சைவ அன்பர்களும், ஆத்திகப் பெரு மக்களும் இந்நூலை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.சுப்பு ரெட்டியார் :

ஆய்வு நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :