சைவ இலக்கிய வரலாறு

ஆசிரியர்: ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை

Category ஆய்வு நூல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 392
Weight400 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகையில், தமிழ் இலக்கிய வரலாறு எழுத வேண்டிய ஏற்பாடொன்று உருவாயிற்று. தமிழிலக்கியங்களைப் பல பகுதி களாகப் பிரித்துக்கொண்டு இவ்வரலாற்றைக் காண்பது முறையாகத் தோன்றினமையின் அம்முறையில் சைவ இலக்கியப் பகுதி என்பால் எய்திற்று.இலக்கியங்கள் பலவும் தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதா யத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கு அறிந்த செய்தி. அந்நெறியில் சைவ இலக்கியங்கள் தாம் பிறந்த காலத்து வாழ்ந்த சைவ மக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப் பயில்வோர்க்கு உணர்த்தும் அறிவுக் கருவூலங்களாகும், ஆயினும் இவ் விலக்கியங்களின் தோற்றம், பேணற்பர்டு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும் அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிகம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொதுவரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை :

ஆய்வு நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :