சே குவேரா: வேண்டும் விடுதலை!

ஆசிரியர்: மருதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 160
ISBN978-81-8368-244-2
Weight200 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தான் வாழ்ந்த காலம் முழுவதும், அசாத்தியங்களை மட்டுமே தேர்ந் தெடுத்துக் கனவு காண்பவராக இருந்தவர் சே குவேரா. அதனால் தான் அவரது வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் அதிரடியாக இருக்கிறது.
பிறப்பால் ஓர் அர்ஜெண்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப் பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங் கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அங்கே அடர்ந்த காட்டில் அடுத்த புரட்சிக்கான ஆயத்தங்கள். அங்கும் வேண்டும் விடுதலை! க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக் காகவும் சே ஏன் போராட வேண்டும்? யார் அவருடைய எதிரிகள்? சி.ஐ.ஏ. ஏன் அவரை வலை வீசித் தேடியது? சேவைக் கொன்றவர்கள் யார்? ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தியைத்தான் உரக்கச் சொல்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :